தமிழகம்

தேர்தல் பறக்கும் படை சோதனை: தமிழகத்தில் இதுவரை ரூ.192 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு,தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால் 17-ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய தலைவர்களும் விரைவில் தமிழகம் வர உள்ளனர். தேர்தல் பறக்கும் படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று காலை வரை ரூ.82.63 கோடி மதிப்பிலான ரொக்கம், ரூ.4.34 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், ரூ.89.41 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.15.43 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் என மொத்தம் ரூ.192.67 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT