தமிழகம்

முதல்வர் பாராட்டு விழாவில் பங்கேற்க வீடுதோறும் அழைப்பு: அதிமுகவினர் மும்முரம்

செய்திப்பிரிவு

மதுரையில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள முதல் வருக்கான பாராட்டு விழா வில் பங்கேற்க அனைத்து விவசாயிகளின் வீடுக ளுக்கும் நேரில் சென்று அதிமுகவினரும், விவசாய சங்கங்களைச் சேர்ந்த வர்களும் அழைப்பு விடுத்து வருகின் றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது. இதன் நீர்தேக்க அளவை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரும் 22-ம் தேதி மதுரை ரிங்ரோடு பாண்டி கோயில் அருகே 5 மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தலும், 3 லட்சம் பேர் நிற்கும் வகையில் அகன்ற வளாகமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர விழா நடைபெறும் திடல் முன் முல்லை பெரியாறு அணை வடிவத்தில் முகப்பை அமைத்து, அதிலிருந்து நீர் வெளியேறுவது போன்ற காட்சியை செயற்கையாக அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் சார்ந்த விழா என்பதால் கட்சியினரைவிட விவசா யிகளை இதில் பங்கேற்கச் செய்யும் முயற்சியில் அதிமுக வினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விவசாய சங்கங் களின் நிர்வாகிகள் மூலம் 5 மாவட் டத்திலுள்ள அனைத்து விவசாயிகளின் வீடுகளுக்கும் நேரில் சென்று முதல்வருக்கான பாராட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி விவசாய சங்கங் களின் நிர்வாகிகள் கூறும் போது, கட்சிக்கு அப்பாற்பட்டு நடத்தப்படும் விழா இது. வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி கொடுத்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவிக்க வருமாறு 5 மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் வீடுகளுக்கும் அதிமுகவினரின் உதவியுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT