திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட மகனுக்கு சீட் வழங்காததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவது தவறு என்று, தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். திருநெல்வேலி மக்களவை தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாலோ, எனது மகனுக்கு சீட் வழங்க வில்லை என்பதாலோ எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் முழு முடிவுகளை எடுக்கலாம்.
எனது மகனுக்கு போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவுக்கு நான் விவரம் இல்லா தவன் இல்லை. திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்னை சந்திக்க வந்தபோது, 3 மணி நேரம் காக்க வைத்திருந்த தாக கூறுவதும் தவறானது. யாரையோ திருப்தி படுத்துவதற்காக இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.