இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டையில் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக் கூறி வந்த பிரதமர் மோடியின் கணக்கு சரியத் தொடங்கி உள்ளது. இதை சரிக்கட்ட பிரச்சினையைத் திசை திருப்ப மோடி முயல்கிறார்.
1974-ல் இந்திரா பிரதமராக இருந்தபோது, நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கும் கச்சத் தீவு கொடுக்கப்பட்டது. அதனை மீட்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது தவறு எனப் பிரதமர் மோடி கருதியிருந்தால், 10 ஆண்டு ஆட்சியில் சட்டத்தின் மூலம் கச்சத்தீவை மீட்டு இருக்கலாம். காங்கிரஸ் மற்றும் திமுக கச்சத்தீவை தாரை வார்த்து விட்டது எனச் சொல்லி பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார்கள் என்றார்.