புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அப்பா பைத்திய சுவாமியை வணங்கி விட்டுத்தான் எதையும் தொடங்குவது வழக்கம். அவரைப்பின் பற்றி பலரும் அந்த வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்துக்கு சென்றும் அங்குள்ள அப்பா பைத்திய சுவாமி கோயிலை வழிபட்டு வருகின்றனர். இதேபோல், தேர்தல் பிரச்சாரத்தை புதுச்சேரியின் சனி மூலையாக கருதப்படும் காலாப் பட்டு தொகுதியில் தொடங்குவதும் அவரது வழக்கம். இம்முறையும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி அங்குதான் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.
தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் ஆகியோரும் இங்கிருந்து தான் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். வேறு வேறு கொள்கைகளை முன்வைத்தாலும், இந்த ஒரு விஷயத்தில் இவர்கள் அனைவரது சென்டிமென்டும் ஒன்றாகவே உள்ளது.