தமிழகம்

தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்யலாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதுக்கு உட்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவி வகித்த முன்னாள் படைவீரர்கள் உடனடியாக சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். அங்கு உரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 044-2235 0780 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT