தமிழகம்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

74 வயதான இவர், மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள் குழுவினர், இதயம் சார்ந்த சிகிச்சையை அளித்து வருகின்றனர்.

மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT