கோப்புப் படம் 
தமிழகம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் 1.54 கோடி இணை நோயாளிகளுக்கு மருந்து விநியோகம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை 67.30 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36.50 லட்சம் சர்க்கரை நோயாளிகள், இரண்டு பாதிப்புகளும் உள்ள 31.3 லட்சம் நோயாளிகள் உட்பட மொத்தம் 1.54 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும்கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT