சென்னை: தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன். ஜாபர்கான்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுமை ஆட்டோவில் (குட்டியானை வகை வாகனம்) பேண்டு வாத்திய குழுவினர் அமர்ந்து இசைத்தனர். அந்த சுமை ஆட்டோவை பிரசாரத்துக்கு பயன்படுத்துவற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், குமரன்நகர் போலீஸார் பாஜகவின் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிஅமைப்பாளர் சரவணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.