சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் சாமி கும்பிட்ட சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ். உடன் மாவட்டச் செயலாளர் செந்தில்நா தன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன். 
தமிழகம்

தினமும் கோயிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரம் - சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் ‘சென்டிமென்ட்’

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் ‘சென்ட்டிமென்ட்டாக’ தினமும் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தான் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

சிவகங்கை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி களில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போட்டியிட்டபோதும், சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் போட்டி யிட்டபோதும், சிவன் கோயிலில் சாமி கும்பிட்ட பின்னரே வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

அதேபோல், பிரச்சாரத்தைத் தொடங்கும் இடத்தில் உள்ள கோயில்களில் சாமி கும்பிட்ட பின்னரே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இருவரும் வெற்றியும் பெற்றனர்.

அதே சென்டிமென்ட்டில், தற்போது சிவகங்கையில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸும் சிவன் கோயிலில் சாமி கும்பிட்ட பின்னரே வேட்புமனுத் தாக்கல் செய்தார். மேலும், கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னரே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் சிவகங்கை சிபி காலனி சமயபுரம் முத்து மாரியம்மன் கோயிலிலும், நேற்று சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலும் வழிபட்டு விட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். இவருக்கும் அந்த சென்ட்டிமென்ட் கை கொடுக்குமா? என்பது தேர்தல் முடிவின்போது தெரியவரும்.

SCROLL FOR NEXT