திருவள்ளூர் நகராட்சி ஊழியர் கொலை வழக்கில், அவரது மகன் கைது செய்யப்பட்டார். சொத்து தகராறில் மகனே தந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் வள்ளுவ புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (56). இவர் திருவள்ளூர் நகராட்சி யில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்துவந்தார். இவருக்கு அன்ன பூரணி என்ற மனைவியும், ஸ்ரீதர், மாலதி ஆகிய இரு பிள்ளை களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில், மாரிமுத்து, திருவள்ளூர் கம்பர் தெருவை சேர்ந்த பொன்மணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவருக்கு லாவண்யா, காயத்ரி ஆகிய இரு மகள்களும், தேவ குமார் என்ற மகனும் உள்ளனர். மாரிமுத்து அடிக்கடி இரண்டாவது மனைவி வீட்டில் தங்கிவந்தார்.
ஒரு கட்டத்தில் மாரிமுத்து தனது வீட்டை பொன்மணி பெய ருக்கு எழுதிவைக்க முயன்ற தாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த முதல் மனைவியும் மகன் ஸ்ரீதரும் மாரிமுத்துவிடம் சண் டையிட்டனர். ஆனால், மாரி முத்து தனது சொத்தை இரண்டா வது மனைவிக்கு எழுதி வைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், மகன் ஸ்ரீதர் ஞாயிற்றுக்கிழமை இரவு வரத ராஜநகரில் உள்ள பம்ப் ஹவு சில் பணியில் இருந்த தந்தை மாரிமுத்துவிடம் சென்று நியாயம் கேட்டார். அப்போது, மாரி முத்து தன் வீட்டை பொன்மணிக்கு தான் கொடுப்பேன் என்று பிடிவாத மாக கூறியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் அங்கிருந்த கட்டையை எடுத்து தந்தை மாரிமுத்துவை தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்து மாரிமுத்து அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனால், பயந்துபோன தர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்நிலையில், திங்கட்கிழமை காலை மாரிமுத்துவுக்கு உணவு கொடுப்பதற்காக இரண்டாவது மனைவியின் மகன் தேவகுமார் பம்ப் ஹவுசிற்கு சென்றார். அப்போது, அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது தந்தையை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். ஆனால், அவர் சிகிச்சை பலன் இன்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந் தார்.
இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாரிமுத்துவை அவரது மகன் ஸ்ரீதர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, போலீஸார் ஸ்ரீதரை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.