தமிழகம்

தமிழகத்தில் 120 வயதுக்கு மேல் 55 பேர்

செய்திப்பிரிவு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட வயது வாரியான வாக்காளர் விவரப்படி, 120 வயதுக்கு மேல் 55 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி 6.18 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 6.23 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வயது வாரியாக வாக்காளர் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ளார். அதன்படி, நேற்று மார்ச் 28ம் தேதி நிலவரப்படி, 6,23,33,925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 100 வயதுக்கு மேல் 5527 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 120 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆகும்.

SCROLL FOR NEXT