கோப்புப்படம் 
தமிழகம்

பறக்கும் படையினரின் வாகன சோதனையில் பேக்கரி உரிமையாளரிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று முன்தினம் இரவுபறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த குபேந்திரன் என்பவரின் வாகனத்தை சோதித்தபோது அதில் ரூ.15 லட்சம் ரொக்கம் இருந்தது.

பணத்துக்கான ஆவணங்கள் குபேந்திரனிடம் இல்லை. இதையடுத்து, பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக பறக்கும் படை அதிகாரிகளிடம், குபேந்திரன், பழைய வண்ணாரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருவதாகவும் சொந்தமாக இடம் வாங்குவதற்காக, சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஆவணங்களுடன் வந்து பணத்தை பெற்றுச் செல்லுங்கள் எனக் கூறி அவரை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT