தமிழகம்

கல்பாக்கம் | மீனவர் பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

கல்பாக்கம்: கல்பாக்கத்தை அடுத்த கடலூர் சின்னகுப்பம், பெரிய குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புற மீனவ பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஏப். 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம் நேற்று கல்பாக்கத்தை அடுத்த கடலூர் சின்னக்குப்பம், பெரிய குப்பம் மற்றும் கூவத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள மீனவ பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் செல்வத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு: மேலும் மீனவ பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு சால்வையுடன், ரோஜா மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் வாக்குறுதி அளித்தார்.

இதில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலார் மற்றும் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT