வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த். 
தமிழகம்

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்து மதிப்பு ரூ.88.80 கோடி

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா உட்பட குடும்பத்தினரின் பெயரில் மொத்தம் ரூ.88 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 643 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன். கதிர் ஆனந்த் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கு, வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்த வழக்கு, காட்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்டு முன்னெச்சரிக்கையாக கைதான வழக்கு, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு கைதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்தான நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்த் வசம் கையிருப்பு ரொக்கமாக ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16, சங்கீதா வசம் 8 லட்சத்து 83 ஆயிரத்து 879, மகள் செந்தாமரை வசம் 5 லட்சத்து 40 ஆயிரத்து 317. பல்வேறு வங்கிகளில் முதலீடாக கதிர் ஆனந்த் வசம் 16 கோடியே 74 லட்சத்து 90 ஆயிரத்து 956, சங்கீதா வசம் 69 லட்சத்து 54 ஆயிரத்து 438, செந்தாமரை வசம் 32 லட்சத்து 24 ஆயிரத்து 35 உள்ளது.

கதிர் ஆனந்த் வசம் 3,664 கிராம் தங்கம், 3 கேரட் வைரம், 31.700 கிலோ வெள்ளி, சங்கீதா வசம் 1,003 கிராம் தங்கம், 1.5 கேரட் வைரம், 10.868 கிலோ வெள்ளி மற்றும் கதிர் ஆனந்த பெயரில் சொகுசு கார், சங்கீதா பெயரில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் உள்ளிட்ட வாகனங்கள் என அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பாக கதிர்ஆனந்த் வசம் ரூ.32 கோடியே 77 லட்சத்து 55 ஆயிரத்து 392, சங்கீதா வசம் ரூ.7 கோடியே 40 லட்சத்து 26 ஆயிரத்து 873, செந்தாமரை வசம் 87 லட்சத்து 70 ஆயிரத்து 2 என உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி கண்டிப்பேடு, வண்டறந்தாங்கல், சேர்க்காடு, தாராபடவேடு, ஏலகிரி மலை, கரிகிரி, கீழாச்சூர், சென்னை நீலாங்கரை, ஈரோடு, தாராபுரம், கும்மிடிபூண்டி சிப்காட், தி.நகர், திருப்போரூர், அடையாறு என பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள், காலிமனைகள், கட்டிடங்கள் என அசையா சொத்துகள் என கதிர்ஆனந்த் பெயரில் மொத்தம் ரூ.26 கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 24 , சங்கீதா பெயரில் ரூ.18 கோடியே 38 லட்சத்து 62 ஆயிரத்து 332 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.97 லட்சத்து 86 ஆயிரத்து 20 மதிப்பிலும் உள்ளன.

கதிர் ஆனந்த் பெயரில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், சங்கீதா பெயரில் ரூ.43 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 182, மகள் செந்தாமரை பெயரில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 87 ஆயிரத்து 305 மதிப்பிலும் கடன் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT