நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில் அதனை ஏற்க மறுத்து, அதற்கு பதிலாக படகு அல்லது தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அதை ஏற்க மறுத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்தான் என்பதை தேர்தல் ஆணையம் நேற்று உறுதி செய்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.