தமிழகம்

“போகப் போக திருச்சி களம் மாறும்” - சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின், அதிமுக வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியில் எம்.பி.யாக இருப்பவர் தொகுதி பக்கமே வரவில்லை. நான், திருச்சி மக்களின் எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் வகையில் செயல்படுவேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, தற்போது திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, “திருச்சி தொகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தர, ஓடுகிற பாம்பை மிதிக்கும் வயதிலான துடிப்பான இளைஞரை வேட்பாளராக அதிமுக கள மிறக்கியிருக்கிறது. நேற்றுதான் அறிமுகக் கூட்டம் நடந்துள்ளது. நாளை முதல் திருச்சி வேட்பாளர் பிரச்சாரம் தொடங்க உள்ளார். போக, போக திருச்சி களம் மாறுவது தெரியும்” என்றார்.

SCROLL FOR NEXT