பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சின்னங்களை காட்டிலும் போட்டியிடுவோரின் அரசியல் , கடந்த காலங்களில் மக்களுக்கு செய்த திட்டங்களை வைத்துதான் மக்கள் வாக்களிப்பர்.
என்னை கேள்வி கேட்க ஆர்.பி.உதயகுமாருக்கு தகுதியும் இல்லை, திறமையும் இல்லை. அதிமுகவில் முன்பு எனக்காக வேலை பார்த்தவர்கள், இப்போது எனக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள்.
நான் மத்திய அமைச்சர் ஆவது பிரதமர் மோடியின் இதயத்தில் இருந்துதான் வர வேண்டும். வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.