கோப்புப் படம் 
தமிழகம்

நாமக்கல் அருகே ரூ.15 கோடி நகை பறிமுதல்

செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணத்தில் இருந்த விவரத்துக்கும் எடுத்துவந்த நகைக்கும் வித்தியாசம்இருந்ததால் ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த வாகனத்தில் சோதனை செய்தனர்.

அதில் மூட்டை, மூட்டையாக ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. பல்வேறுமாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதும் தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பிரிவு அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT