திருவண்ணாமலை: கடந்த 2010-ல் காங்கிரஸ் ஆட்சியில் தான் ‘நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, “ஆரணி மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்டால், வெற்றியை பெற்றுத் தருவோம் என திமுக தொண் டர்கள் வலியுறுத்தியதால், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தரப்பட்டுள்ளது.
கடந்த 2019-ல் நடைபெற்ற தேர்தலில் 2.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இப்போது, 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், ஆரணி தொகுதியில் மாதம் 2 முறை தங்கி, உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்.
வந்தவாசிக்கு கலை அறிவியல் கல்லூரி, சிப்காட் கொண்டு வந்தது திமுக ஆட்சி. கீழ்கொடுங்காலூரில் ரூ.5 கோடியில் சுகநதியில் தடுப்பணை கட்டப்படுகிறது. ஆரணி மக்களவைத் தொகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை, திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை, நெல்-அரிசி ஏற்றுமதி மையம், திருவண்ணாமலை - சென்னைக்கு நேரடி ரயில் சேவை, நெசவு மற்றும் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு வரிவிலக்கு பெற்றுத் தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘சொன்னதை செய்வோம், செய் வதை சொல்வோம்’ என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் வந்தவர் என்பதால், அவர் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கட்டணமில்லா பேருந்து பயணம் மகளிரிடையே வரவேற்பை பெற் றுள்ளது. பிங்க் பஸ் என்பதை ஸ்டாலின் பஸ் என செல்லமாக அழைக்கின்றனர். காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர் தலுக்கு பிறகு மாணவர்களும் பயன் பெற, தமிழ் புதல்வன் திட்டம் செயல் படுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத் துக்கு ஒரு திட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டு வரவில்லை. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வரவில்லை. தேர்தல் என்பதால், தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். கடந்த 2019-ல் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டியதோடு சரி. கட்டிடம் கட்டப்படவில்லை. ‘கல்’லை காட்டுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுகிறார். அடிக்கல் நாட்டு விழாவில் மோடி யுடன் அவர் ‘பல்’லை காட்டுகிறார்.
கடந்த 2010-ல் காங்கிரஸ் ஆட்சியில் ‘நீட்' தேர்வை கொண்டு வந்தது. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழகத்தில் ‘நீட்' தேர்வை அனுமதிக்க முடியாது என்றார். முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவும் அனுமதிக்கவில்லை. அவர் மறைந்த பிறகு, ‘நீட்' தேர்வை பழனி சாமி ஆட்சியில் அனுமதித்தது. இதனால், அனிதா முதல் ஜெகதீஷ் வரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது தற்கொலையா? இல்லை கொலை. பாஜகவும், அதிமுகவும் செய்த கூட்டுக்கொலை. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத் ததும், ‘நீட்' தேர்வில் இருந்து தமிழ கத்துக்கு விலக்கு பெற்றுத்தரப்படும் என தேர்தல் அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வருவதால் காஸ் சிலிண்டர் விலையை ரூ.100-ஐ குறைத்துள்ளார் மோடி. தேர்தலுக்கு பிறகு ரூ.500-ஆக ஏற்றிவிடுவார். அவரது ஆட்சியில் ஊழல் நடை பெற்றுள்ளதாக தணிக்கை குழுவின் அறிக்கை கூறுகிறது.
மோடியின் ஆட்சியில் அதானி மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளார். மக்கள் வளர்ச்சி பெறவில்லை. பாஜகவை வீட்டுக்கு அனுப்ப, உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.