தமிழகம்

பெட்ரோல், மதுவுக்கு டோக்கன் விநியோகமா? - புதுவையில் தேர்தல் துறை ரகசிய கண்காணிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவையில் பெட்ரோல், மதுவுக்கு டோக்கன் தரப்படுகிறதா என்பதை அறிய தேர்தல் துறையின் பறக்கும் படையினர் கண்காணிப்பில் இறங்கியுள்ளனர்.

புதுவையில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. வாக்குப் பதிவு முடியும் வரை வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவர். இச்சூழலில் தேர்தல் பறக்கும் படையின் கண்காணிப்புக் குழுவினர் மதுக் கடைகள், பெட் ரோல் பங்குகளில் சோதனையை முன் கூட்டியே தொடங்கியுள்ளனர். மதுவை மொத்தமாக வாங்கினால் அபராதம் விதிக்கின்றனர்.

சிலர் டோக்கன் முறையில் மது, பெட்ரோல் விநியோகம் செய்வது வழக்கம். பெட்ரோல், மதுவுக்கு தரப்படும் டோக்கனை பிடிக்க தேர்தல் துறை மும்முரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க், பார்களை ஆய்வு நடத்திய தேர்தல் துறையினர், டோக்கன் முறையில் பெட்ரோல், மது வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். தொடர்ந்து இதை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT