சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி. 
தமிழகம்

“சிதம்பரம் கோயிலை அரசு கைப்பற்ற முயற்சிப்பதை தடுப்பேன்” - பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர், “சிதம்பரம் ஸ்ரீசபாநாயகர் கோயிலை ( நடராஜர் கோயில் ) இந்து சமய அறநிலையத் துறை கைப் பற்ற முயற்சி செய்வதை தடுப்பேன்” என சிதம்பரம் தொகுதி மக்களுக்கு முதல் வாக்குறுதி அளித்து பேசினார்.

பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை, சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் கேப்டன் பால சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT