ஓ. பன்னீர்செல்வம் 
தமிழகம்

''பாஜக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம்'' - ஓபிஎஸ் தகவல்

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: பாஜக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அவரது குல தெய்வமான ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் வழிபாடு நடத்தினார். அதன்பின் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ராமநாதபுரம் தொகுதியில் திங்கள் கிழமை மதியம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்” என்றார்.

SCROLL FOR NEXT