தமிழகம்

வா ராசா.. வா ராசா கமலஹாசா: அரசியல் பயணத்தைத் தொடங்கும் கமலை வரவேற்கும் பாடல் வெளியீடு

பாரதி ஆனந்த்

நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், யூடியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், 'வா ராசா.. வா ராசா கமலஹாசா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை துவக்குகிறார். ராமேசுவரத்தில் இருந்து தனது பயணத்தை அவர் பயணத்தைத் தொடங்குகிறார். பின்னர், மாலையில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு கட்சியின் கொடியையும், பெயரையும் அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

முன்னதாக, தான் அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

நாளை அரசியல் பயணத்தை அவர் தொடங்கவுள்ள நிலையில், இணையத்தில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், 'வா ராசா.. வா ராசா கமலஹாசா... தமிழ்நாட்டை ஆளப் பொறந்தவரே மவராசா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கண்மணிராஜா என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை திவ்யாநாயர் என்ற பெண் பாடியுள்ளார். செங்கதிர்வாணன் என்பவர் பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடல் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வா ராசா.. வா ராசா பாடல் லின்க் 

SCROLL FOR NEXT