பாஜகவில் இணைய முடிவு செய்துள்ள ப.ராமநாதனை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் உள்ளிட்டோர். 
தமிழகம்

தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தி: பாஜகவில் இணையும் தேமுதிக மாவட்ட செயலாளர்!

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக சிவநேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் மருத்துவர் ப.ராமநாதன் அதிருப்தியடைந்தார்.

இதையடுத்து அவர் பாஜகவில் இணைய முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம், மாவட்டத் தலைவர் பி.ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் நேற்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து ராமநாதன் கூறும்போது, ‘‘எனக்கு சீட் கிடைக்காததால் நான் கட்சியிலிருந்து விலகவில்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காததால் விலகி பாஜகவில் சேர உள்ளேன்’’ என்றார்.

அவர் இன்று ( மார்ச் 24 ) தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர். இதனிடையே, தேமுதிக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராமநாதன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT