கோவை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 20-ம் தேதி வரை 61 வழக்குகளில் ரூ.1.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மார்ச் 21-ம் தேதி 11 வழக்குகள் பதிவு செய்து ரூ.8.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 72 வழக்குகளில் ரூ.1.68 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் இதுவரை ரூ.25 லட்சம் உரியவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி நிலவரப்படி ரூ.1.42 கோடி ரொக்கப் பணம் விசாரணை நிலுவையில் உள்ளது, என்றனர்.