மக்களவைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் இருந்து இறக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள். 
தமிழகம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்போரூரில் பாதுகாப்பு அறையில் வைப்பு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் 318 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு, மறைமலை நகராட்சி அலுவலகத்திலிருந்து 383 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 383 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 414 விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

மேலும், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வாகனத்தின் சீல் அகற்றப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் பாதுகாப்புடன் இறக்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் வைத்தனர்.

பின்னர், அறையை மூடி சீல் வைத்தனர். மேலும், அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வட்டாட்சியர் பூங்கொடி, மண்டல துணை வட்டாட்சியர் ஜீவிதா, சையது அலி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT