நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நந்தினி போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை காங்கிரஸ்சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுடன் இத்தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விளவங்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜக வேட்பாளராக நந்தினி (41) நேற்று அறிவிக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம்.
நாயர் சமுதாயத்தை சேர்ந்தநந்தினி பாஜக ஒன்றிய செயற்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழுஉறுப்பினர், மாவட்ட செயலாளர்பொறுப்புகளை வகித்தவர். தற்போது இவர் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இணைஒருங்கிணைப்பாளராக உள்ளார்.இவரது கணவர் சுரேஷ்குமார். எலக்ட்ரீசியன் தொழில் செய்கிறார். இவர்களுக்கு நிரஞ்சன் (13) என்ற மகன் உள்ளார். மாவட்ட செயற்குழு,மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்தவர்.