கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எல்.தங்கவேல் (66) அறிவிக்கப்பட்டுள்ளார்.
கரூர் செங்குந்தபுரம் காமராஜபுரம் வடக்கு திருநகரைச் சேர்ந்த எல்.தங்கவேல், பியுசி முடித்துள்ளார். இவரது தந்தை எம்.லட்சுமண கவுண்டர். ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி தொழில் மற்றும் விவசாயம் செய்து வரும் தங்கவேல், அதிமுகவில் தற்போது எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளராக உள்ளார்.