ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர்: கே.இ.பிரகாஷ், வயது: 48 | சொந்த ஊர்: காணியம்பாளையம், சிவகிரி. | கல்வி: இளங்கலை பொருளாதாரம் | தொழில்: விவசாயம், கெமிக்கல் சார்ந்த தொழில். | கட்சிப் பதவி: ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்தவர், தற்போது இளைஞரணியின் மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
குடும்பம்: மனைவி கோகிலா, மகள் கன்யா, மகன் இனியன். மனைவி கோகிலா, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக கவுன்சிலராக 2011-ம் ஆண்டு பதவி வகித்துள்ளார். பிரகாஷின் தந்தை கே.எஸ்.ஈஸ்வரமூர்த்தி, திமுகவின் தொடக்க கால உறுப்பினர். 1977 முதல் இன்று வரை காணியம்பாளையம் திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் ஆற்றல் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர்: ஆற்றல் அசோக்குமார், வயது: 54 | சொந்த ஊர்: புதுப்பாளையம், கொடுமுடி. | கல்வித்தகுதி: முதுநிலை மின் மற்றும் கணினி பொறியியல், முதுநிலை வணிக நிர்வாகம். | கட்சிப் பொறுப்பு: ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் | தொழில்: ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர், தனியார் கல்வி நிறுவனங்களிலும் தலைவராக உள்ளார்.
குடும்பம்: மனைவி கருணாம்பிகா, மகன்கள் அஸ்வின்குமார், நிதின்குமார், இவரது தந்தை ஆர். ஆறுமுகம். தாய் சவுந்தரம் முன்னாள் எம்பி ஆவார். இவரது மனைவியின் தாய் ( மாமியார் ) சி.சரஸ்வதி, மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.