கே.ஈஸ்வரசாமி 
தமிழகம்

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி - சிறு குறிப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி ( 48 ) அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சி கருப்புசாமி புதூரை பூர்வீகமாக கொண்டவர் கே.ஈஸ்வரசாமி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். மனைவி லதாபிரியா மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். கே.ஈஸ்வரசாமி பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.

திமுகவில் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். அத்துடன் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராகவும் உள்ளார்.

கே.ஈஸ்வரசாமி மடத்துக்குளத்தில் இருசக்கர வாகன விற்பனையகம், புளூ மெட்டல்ஸ், நூற்பாலை, எம்.சாண்ட் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் தாளாளர் ஆக உள்ளார்.

SCROLL FOR NEXT