திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் மு.ஷாஜஹான் (36). இவர்,சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஷாஜகானை போலீஸார் அழைத்து வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்ற அறையிலிருந்து வெளியே வந்த ஷாஜஹான், திடீரென நீதிமன்ற மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு, திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஷாஜகான் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் விசாரிக்கின்றனர்.