தமிழகம்

மாலையில் அதிமுக... விடிந்ததும் பாஜக! - பாமக கூட்டணி ‘ட்விஸ்ட்’ பின்புலம்

நிவேதா தனிமொழி

திங்கள்கிழமை மாலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாமக, செவ்வாய்க்கிழமை காலையில் பாஜகவுடன் கூட்டணி இறுதியானதாக அறிவித்து, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த திடீர் ட்விஸ்ட்டின் பின்னணி என்ன?

பாமக - பாஜக இடையிலான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடந்தது. இதில், தீவிர ஆலோசனைக்குப் பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (மார்ச் 19) காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முழுமையான பேச்சுவார்த்தைக்குப் பின் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி, “60 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம், மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யவே இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம்’’ என விளக்கமளித்தார்.

‘“பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது. 2024-ல் மாபெரும் வெற்றி, 2026-ல் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம். நாங்கள் இரவோடு இரவாகக் கோவையிலிருந்து இங்கு வந்ததற்கு காரணம், இன்று சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராமதாஸை அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசைதான்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

‘எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று கூறப்படுகிறது. பாஜக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராமதாஸும் அன்புமணியும் பங்கேற்றனர்.

கூட்டணி மாறியது எப்படி? - திங்கள்கிழமை மாலை, பாமக எம்எல்ஏ அருள் தமது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தார். இதனால் , அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகும் என்னும் செய்திகள் வெளியாகின. ஆனால், மாலையில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக - பாஜக கூட்டணி டிக் செய்யப்பட்டது.

அதிமுக கூட்டணியில் இணைய சட்டப்பேரவைத் தேர்தலையும் குறிப்பிட்டு பாமக நிர்வாகி

எதிர்கால அரசியல் நலனைக் கருத்தில் கொண்டு பாமகவை தனது கூட்டணியில் தன்வசப்படுத்தியதன் மூலம் வட தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக வியூகம் அமைத்து காய்களை நகர்த்தி வருகிறது.

கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருக்கின்றனர். ஆனால், பாஜகவுடன் இணைந்தால்தான் பலன் அதிகம் என அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார். அதனால், பாஜகவுடன் கூட்டணி என்னும் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

தவிர, இறுதிவரை 7 தொகுதிகள் மட்டுமே அதிமுக தர முன்வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது பாஜகவில் 10 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை சீட்டும் உறுதி என சொல்லப்படுகிறது. ஆனால், அது குறித்து இரு கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பதால் அது புதிராகவுள்ளது. இருப்பினும், கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

10 தொகுதிகளைப் பெற்றுள்ளதால் கணிசமான அளவு வாக்குகள் பெறவும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்த அங்கீகாரத்தை மீட்கவும் முடியும் என ராமதாஸை சரிக்கட்டி, பாஜகவில் இணைய அன்புமணி காய் நகர்த்தி இருக்கிறார். இணையமைச்சர் பதவி பெறவும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது பலிக்குமா என்பதையும், இந்தக் கூட்டணி பாமகவுக்கு பலன் தருமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். | வாசிக்க > அதிமுகவை பலவீனம் ஆக்குதல், எதிர்கால அரசியல் நலன்... - பாஜக வியூகம் என்ன?

SCROLL FOR NEXT