தமிழகம்

கலாம் பள்ளிக்கு செல்லவிடாமல் என்னை தடுத்ததில் அரசியல் உள்ளது: கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

கலாம் படித்த பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கலாம் வீட்டிலிருந்து அவர் படித்த பள்ளிக்கு செல்வதாக கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசியல் நோக்கத்துடன் கமல் வருவதால் பள்ளிக்கு செல்ல அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து கலாம் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாட கமல்ஹாசனுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அப்பள்ளி முன்பாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கலாம் படித்த பள்ளி முன்பாக கமல்ஹாசன் வாகனம் வந்தபோது அதில் நின்றபடியே ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு கமல்ஹாசன் சென்றார்.

இது குறித்து கமல்ஹாசன், "கலாம் பள்ளிக்கு செல்லாமல் என்னை தடுத்ததில் அரசியல் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு கலாம் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறேன்" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT