தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 20 முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும். மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிக பட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை அதிகமாக இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்ப நிலை 95 டிகிரி, குறைந்த பட்ச வெப்ப நிலை 79 டிகிரி ஃபாரன் ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT