விழுப்புரம்: பிரதமர் கிசான் நிதியுதவி திட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் நிதியு தவி வழங்கக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விழுப்புரம் ஆட்சியர் பழனியிடம் மனு அளித்தனர்.
பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் வந்தால் விவசாயிக ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கி றார்கள். தேர்தல் முடிந்தவுடன் எங்களை அடிமை போல் நடத்துகிறார்கள். பிரதமர் மோடி அனைத்துவிவசாயிகளுக்கும் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த தொகையே குறைவு.
ஆனால், அறிவித்த அந்த தொகையும் விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என தெரி வித்தார்கள், லாபகரமான விலை கிடைக்கும் என கூறினார்கள். ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைப்பதில்லை.
டெல்லியில் போராட்டம் நடத்தலாம் என்றால் எங்களை போகவிடாமல் தடுக்கிறார்கள்.டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசுகிறார்கள். இதில் ஒரு விவசாயி இறந்துள்ளார்.
பிரிவு 19-ன்படி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யார் வேண்டுமானாலும் டெல்லி செல்லலாம், தங்களின் உரிமைக்காக பேச லாம், போராடலாம் என்று தெரி விக்கிறது.
ஆனால் பிரதமர் மோடி இந்தச் சட்டத்தை மதிக்கவில்லை. சர்வாதிகார நாடுகளில் நடத்துவது போல், விவசாயிகளை நடத்து கிறார்கள்.
தமிழகத்தில் விவசாயிகளை ஒடுக்கப் பார்க்கிறார்கள். எத்த னால், மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுப்பதற்காக விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
‘யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், மோடிக்கு மட்டும்ஓட்டுபோடாதீர்கள்’ என்று நாடு முழுவதும் அந்தந்த மாநில விவசாய சங்கங்களைத் திரட்டி பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டி ருக்கிறோம்.
நாடு முழுவதும் ஒட்டு மொத்த மாக 20 சதவீத விவசாயிகள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும். இதற்காக டெல்லிக்கு சென்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்க உள்ளோம் என்றார்.