காரத் கருண் உத்தவ்ராவ் 
தமிழகம்

மதுரை காவல் துணை ஆணையர் 3 மாதத்தில் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாநகர தெற்கு காவல் பிரிவு துணை ஆணையராக பி.பாலாஜி, கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். தற்போது, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் துறையினருக்கான நல பிரிவுக்கு உதவி ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக, அருப்புக்கோட்டையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த காரத் கருண் உத்தவ் ராவ் பதவி உயர்வு பெற்று, மதுரை மாநகர தெற்கு காவல் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஓரிரு நாளில் அவர் பொறுப்பேற்பார் என போலீஸார் கூறினர். நிர்வாக ரீதியான மாற்றமாக இருந்தாலும், 3 மாதங்களில் துணை ஆணையர் பி.பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT