அண்ணாமலை மற்றும் தினகரன் 
தமிழகம்

நள்ளிரவில் பாஜகவுடன் டி.டி.வி.தினகரன் கூட்டணி பேச்சுவார்த்தை @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மேற்கொண்டார். சென்னை - கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், நள்ளிரவு நேரத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த சந்திப்பின்போது பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இருந்தனர். இரண்டு கட்சியின் தரப்பிலும் கூட்டணி உறுதியாகி உள்ளது. இதனை தினகரன் தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாருக்கு எத்தனை சீட்?, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து இருதரப்பும் இதில் கலந்து பேசியதாக தகவல். டி.டி.வி.தினகரன் உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டது பாஜக. முன்னதாக, நடிகர் சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT