ராமேசுவரம் பாம்பனில் உள்ள ரயில்வே தூக்குப் பாலத்தில் மோதி சேதமடைந்த விசைப்படகு. 
தமிழகம்

ராமேசுவரம் பாம்பனில் உள்ள ரயில்வே தூக்கு பாலத்தில் மோதி விசைப்படகு சேதம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன்ரயில்வே தூக்குப் பாலத்தில் மோதிய விசைப்படகு சேதமடைந்தது. பாம்பன் தூக்குப் பாலம் பகுதியை ஆழ்கடல் விசைப்படகுகள் கடந்து செல்வதற்காக, அந்தப்பாலத்தை திறப்பதற்கு ரயில் பாலம்பராமரிப்பு அதிகாரிகள் நேற்று பிற்பகல் அனுமதி அளித்தனர்.

முந்திச் சென்றபோது... அதன்படி தூக்குப் பாலம் திறக்கத் தொடங்கியதும், விசைப்படகுகள் போட்டி போட்டுக்கொண்டு தெற்கே மன்னார் வளைகுடாவிலிருந்து, வடக்கே பாக் நீரிணைப் பகுதிக்கு முன்னேறிச்சென்றன. அப்போது, தூக்குப்பாலம் முழுமையாக தூக்கப்படுவதற்கு முன் கடக்க முயன்ற ஒரு படகின் மேல்பகுதி, பாலத்தில் மோதி சேதமடைந்தது.

பாலத்தில் இருந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக, பின்தொடர்ந்து வந்த விசைப்படகுகள் அனைத்தையும் கடக்க விடாமல்தடுத்து, வரிசையாக நிறுத்தினர். பின்னர், மோதிய படகு முழுமையாகக் கடந்து சென்ற பிறகே, மற்ற படகுகள்பாம்பன் ரயில்வே தூக்குப் பாலத்தைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

SCROLL FOR NEXT