சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே ஏற்கெனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதே வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டாலும், ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னைசென்ட்ரல் - பெங்களூரு இடையேமட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.அதன்படி, புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் சென்னைசென்ட்ரலில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும் வந்தே பாரத்ரயில் (20664), இரவு 9.15 மணிக்குபெங்களூரு செல்லும்.
மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் ரயில் (20663), நண்பகல் 12.25-க்குசென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடியில் நின்றுசெல்லும்.
மைசூரு - சென்னை சென்ட்ரல் இடையே வழக்கமான சேவை ஏப்ரல் 5-ம் தேதி முதல் தொடங்குகிறது. மைசூருவில் இருந்து காலை6 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு11.20 மணிக்கு மைசூரு செல்லும்.
இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.