மதுரை: பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கலைஞர் கனவு இல்லத்துக்கு பூமி பூஜை நடந்தது.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு வசிக்க வீடின்றி சிரமப்பட்டு வந்தார். தகவல் அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டம், கிழக்கு வட்டம் பில்லுசேரியில் வசித்து வரும் சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலந்து கொண்டனர்.