தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார் 
தமிழகம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் 

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார், கடந்த மார்ச் 9-ம் தேதி, வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றார். இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியிருந்தது.

ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் திங்கள்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT