சென்னையில் நடைபெறும் இயற்கை வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 13-ம் தேதி (புதன்கிழமை) ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகளை தயாரிப்பது குறித்தும், 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இயற்கை வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வது பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த வாய்ப்பை விவசாயிகள், மகளிர், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.