காரைக்குடி: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிட சீட் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
மாவட்ட காங்கிரஸ் கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரவீன் குமார், மாநிலப் பொதுச் செயலாளர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வட்டார, நகர, பேரூராட்சி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியை காங்கிரசுக்கு கேட்டுப் பெற வேண்டும். மேலும், இத்தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிட சீட் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.