இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு கிரிகெட் வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்த வரிசையில் நடிகர் விவேக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். "இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள்" என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.