சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிடும் பெண்கள். 
தமிழகம்

தாய்லாந்து வாரத்தை முன்னிட்டு சென்னையில் 3 நாள் கண்காட்சி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தாய்லாந்து வாரத்தை முன்னிட்டு,சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சி தொடங்கியது. தாய்லாந்து நாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில்,சென்னையில் ‘தாய்லாந்து வாரம் 2024’ நடைபெறுகிறது. இந்தியாமற்றும் தாய்லாந்து இடையே இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான புதிய சாத்தியக்கூறு தளத்தை உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், தாய்லாந்தின் வர்த்தகர்களுடன் சென்னை போன்றமுக்கிய நகரங்களுக்கு இடையேவர்த்தக இணைப்பை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த நிகழ்வு பயன்படும்.

தாய்லாந்து வாரத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ் பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில், 3 நாட்கள்கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி நாளை (மார்ச் 10) வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை சென்னையில் உள்ள தாய்லாந்து நாட்டு துணைத் தூதர் ரச்சா ஆரிபர்க் தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழகம் ஒரு புனிதமான மாநிலம் மட்டுமின்றி இங்கு படித்தவர்கள், தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதிகமாக வசித்து வருகின்றனர்.

தாய்லாந்து வாரத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் 3 நாட்கள்
நடைபெறும் கண்காட்சியை, சென்னையில் உள்ள தாய்லாந்து நாட்டு துணைத் தூதர்
ரச்சா ஆரிபர்க் தொடங்கி வைத்தார். உடன், சென்னையில் உள்ள தாய்லாந்து
வர்த்தக மையத்தின் இயக்குநர் செக் ஜீனாபென், மும்பையில் உள்ள தாய்லாந்து
நாட்டு முதலீட்டு வாரியத்தின் இயக்குநர் நாக்ரிசன் கிளைகோவ் உள்ளிட்டோர்.
| படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

தாய்லாந்தின் வணிகம் மற்றும் கலாச்சார தொடர்புகளை இந்தியாவுடன், குறிப்பாக தமிழகத்துடன் ஏற்படுத்த இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், தாய்லாந்துநாட்டின் பல்வேறு தயாரிப்புகள்காட்சிப்படுத்தப்படுவதோடு, சென்னையில் உள்ள 30 தாய்லாந்து நிறுவனங்களுக்கும் உள்ளூர்வணிக சமூகத்துக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தஇந்த நிகழ்வு கவனம் செலுத்துகிறது.

மேலும், இந்த 3 நாட்களில், தாய்லாந்தின் பாரம்பரிய தற்காப்புக்கலைகளான முய்தாய் குத்துச்சண்டை நிகழ்ச்சி, தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் உள்ள சமையல் கலைஞர்களால் நடத்தப்படும் தாய் உணவு நேரடி சமையல் நிகழ்ச்சி நடைபெறும். இந்தநிகழ்ச்சியைக் காண அனைவரும்இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள தாய்லாந்து வர்த்தக மையத்தின் இயக்குநர் செக் ஜீனாபென், மும்பையில் உள்ள தாய்லாந்து நாட்டு முதலீட்டு வாரியத்தின் இயக்குநர் நாக்ரிசன் கிளைகோவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT