தமிழகம்

மெட்ரோ பணி காரணமாக நந்தனம் வி.என் சாலையில் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக நந்தனம், வி.என். சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நந்தனம் வி.என் சாலையில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு நந்தனம் வி.என் சாலையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 10.03.2024 முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

வெங்கட நாராயண சாலை மூடப்படும்: அண்ணாசாலையிலிருந்து வெங்கடநாராயண சாலை வழியாக தி.நகர் நோக்கி செல்லும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் தடை செய்யப்படும். அதற்குப் பதிலாக, அவை இணைப்புச் சாலை (ஒரு வழியாகத் திரும்பி) மாடல் ஹவுஸ் சாலை சந்திப்பு, தென்மேற்கு போக் சாலை (வலதுபுறம்) வழியாகத் திரும்பி, வெங்கட் நாராயணன் சாலையில் இடதுபுறமாகத் திரும்பி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

> பர்கிட் ரோடு, தி.நகரில் இருந்து மூப்பரப்பன் தெரு வழியாக வரும் அனைத்து வாகனங்களும், MTC பஸ்கள் உட்பட தென்மேற்கு போக் ரோடு சந்திப்பில் (ஒரு வழி) வலதுபுறமாக திரும்பி சென்று அண்ணாசாலையை அடையலாம்.

> தென்மேற்கு போக் சாலை மற்றும் தெற்கு தண்டபாணி தெருவில் இருந்து வரும் வாகனங்கள் வெங்கட் நாராயணா சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, CIT நகர் 4வது மெயின் ரோடு, CIT நகர் 3வது பிரதான சாலை வழியாக அண்ணாசாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT