தமிழகம்

பாவ விமோசனத்துக்காக ராமேசுவரம் வந்துள்ளார் கமல்: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

செய்திப்பிரிவு

பாவ விமோசனத்துக்காக நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரம் வந்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று மாலை அவர் தனது கட்சி, கொடி, கொள்கையை அறிமுகப்படுத்துகிறார்.

இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "இன்றைக்கு ஒருவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக கூறி ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ராமேசுவரத்துக்கு கடைசி காலத்தில், செய்த பாவத்துக்கு விமோசனம் பெற செல்வார்கள். அவரும் அதற்காகத்தான் சென்றுள்ளார்.

மாலையில் மதுரைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அவர் மதுரைக்கு வரட்டும். அங்கு கட்சிக்கும், கொடிக்கும், கொள்கைக்கும் பஞ்சமில்லை. அரசியலுக்கு வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இன்று புதிய கட்சி தொடங்கும் இவர், சினிமாவில் இருந்த போது மக்களுக்கு என்ன சேவை செய்தார்" என விமர்சித்தார்.

SCROLL FOR NEXT