தமிழகம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக சாந்தோமில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: காரணீஸ்வரர் கோயில் தெரு அருகே சாந்தோம் நெடுஞ்சாலை சிஎம்ஆர்எல் லைட் ஹவுஸ் ஸ்டேஷன் மெட்ரோ ரயில் பணியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து மாற்றம் நாளை (9-ம் தேதி) முதல் ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

இதையடுத்து, காந்தி சிலையிலிருந்து (காமராஜர் சாலை) சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பில் லூப் ரோடு, பட்டினப்பாக்கம் பேருந்து டெர்மினஸ், தெற்கு கால்வாய் வங்கிசாலை சந்திப்பு (சாந்தோம் ஹை ரோடு - டிஜிஎஸ் தினகரன் சாலை சந்திப்பு) நோக்கி திருப்பிவிடப்படும்.

காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் கட்டாயம் இடதுபுறம் திரும்பி லைட் ஹவுஸ் வழியாக இலக்கை அடையலாம். காரணீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. லூப் ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை அடுத்த 3 மாதங்களுக்கு ஒருவழி பாதையாக இருக்கும். சென்னை போக்குவரத்து போலீஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT