புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி படுகொலை தொடர்பாக புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது: புதுவையில் 9 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளி களை கண்டறிந்து கடும் தண் டனை வழங்க வேண்டும். மதுவால்கிடைக்கும் வருவாயை மட்டும்புதுவை அரசு நம்பியிருக்கக் கூடாது.
மது விற்பனை நிலையங்களை மேலும் அதிகரிக்காமல், மது விற்பனையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வரு வாயை அதிகரிக்க பல்வேறு வழி களை கையாள வேண்டும். மாநில அரசின் சிறப்பான நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப் பதன் மூலம் அரசு வருவாயை அதிகரிக்கலாம்.
அதற்கான நடவடிக்கைகளை புதுவை அரசு எடுக்க வேண் டும். புதுவை முழுவதும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, போதைப்பொருட்களை கைப்பற்றி, அவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். போதையின் பிடியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து, மீட்க புதுவை முழுவதும் போதை மறுவழ்வு மையங்களை தொடங்க வேண்டும்.
சிறைகளிலும் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்க வேண்டியது அவசியம். பெற்றோர் தங்கள் பிள்ளை கள் என்ன செய்கின்றனர்? யாருடன் பழகுகின்றனர்? போதைப்பொருட்களை பயன்படுத்துகி றார்களா? என கண்காணித்து தவறான வழியில் செல்வதை தடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த கைது உட்பட கடுமை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.